• vilasalnews@gmail.com

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் கலச விளக்குவேள்வி பூஜை

  • Share on

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. 

சக்தி கொடியை மாவட்ட துணைத்தலைவர் பண்டார முருகன் ஏற்றிவைத்தார். ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன் கருவறையில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் விளக்கேற்றினார்.

கலச விளக்குவேள்வி பூஜையை மாவட்ட மகளிர் அணி தலைவி கே.பத்மாவதி, அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா ஆகியோர் தீபம் ஏற்றி துவக்கிவைத்தனர்.

தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சித்தர் பீட பேச்சாளர் பேராசிரியை இந்திராகாந்தி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு தொடங்கிவைத்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மன்ற தலைவர் அப்பாசாமி மற்றும் நிர்வாகிகள் செவ்வாடைத் தொண்டர்கள் செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம் - துறைமுக சாலையில் அணிவகுத்து நின்ற லாரிகள்

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி - தூத்துக்குடி மாணவ மாணவியர்கள் சாதனை!

  • Share on