தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததை கண்டித்து கண்டெய்னர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் இன்று துறைமுகம் சாலையில் நூற்றுக்கணக்கான லாரிகளை நிறுத்தி, துறைமுக நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு ஒவ்வொரு நாளும் வரும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சரக்குகள், கண்டெய்னர் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் துறைமுகத்தில் இருந்து வெளியேயும், வெளியில் இருந்து உள்ளேயும் கொண்டு செல்ல நூற்றுக்கணக்கான லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், துறைமுகத்தில் சரக்குகளை ஏற்ற மற்றும் இறக்க வரும் கண்டெய்னர் மற்றும் டிப்பர் லாரிகள் மணி கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அச்சமயத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிப்பிட வசதி போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் துறைமுகத்தில் இல்லாததால் ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததை கண்டித்து கண்டெய்னர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் இன்று துறைமுகம் சாலையில் நூற்றுக்கணக்கான லாரிகளை நிறுத்தி, துறைமுக நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.