தூத்துக்குடியில் மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மணிவண்ணன் (47) என்பவருக்கும் இவரது மனைவி மைதிலி (42) என்பவருக்கும் இடையே நேற்று (28.05.2022) குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிவண்ணன் தனது மனைவி மைதிலியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மைதிலி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தார்.