கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர் .
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று (28.05.2022) கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தார் வழ கடம்பூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் விற்பனை செய்த பழக்கடையின் உரிமையாளரான கயத்தார் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் உச்சிமகாளி (45), கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (29) மற்றும் கயத்தார் சாலிவாகனார் தெருவை சேர்ந்த சிவன் மகன் சுடலைமணி (33) ஆகிய 3 பேரைம் கைது செய்து அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட ரூபாய் 16,000/- மதிப்புள்ள 9 ½ கிலோ புகையிலை பொருட்களையும் 58 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.