• vilasalnews@gmail.com

பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அரசு அலுவலர் பதவியிறக்கம்!

  • Share on

பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் என்பவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த காரணத்திற்காக தனியர் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இறுதி உத்தரவாக தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலை கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலிருந்து இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். 

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை பாராட்டி, இதே போன்ற பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது பிற பெண் அரசு ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வண்ணம் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 பிரிவு 13 மற்றும் 15(அ) இன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து ரூ.10,000/- ஒரே தவணையில் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க மாவட்ட ஆட்சித்தலைவரால் ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - கானொளி வாயிலாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் பங்கேற்பு!

பழக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சட்டவிரோத மதுபாட்டில்கள் விற்பனை - கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது!

  • Share on