• vilasalnews@gmail.com

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - கானொளி வாயிலாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் பங்கேற்பு!

  • Share on

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் (23-ம் தேதி) இன்று தொடங்கி வைத்து,  விவசாயிகள் முன் உரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியை, தூத்துக்குடியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கானொளி வாயிலாக கான்பதற்கு ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

இத்திட்டமானது வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, முன்னோடி வங்கி, வனத்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்ட உள்ளது.

மாப்பிளையூரணி ஊராட்சியில் வேளாண்மை துறை மூலம் நெட்டை தென்னங்கன்றுகள், பயிறு வகை விதைகள் விநியோகம், கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் விநியோகம், தோட்டக்கலை மூலம் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான தளைகள் மற்றும் ஊக்கத்தொகை போன்றவைகளை ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கி. பின்னர் அப்பகுதியில் மரக்கன்று நட்டினார்.  

இதில், வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்சி, உதவி வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனை துறை உதவி அலுவலர்கள் மணிகண்டன், வேடியப்பன், கிங்ஸ்டன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், நகர கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜீனத்பிபீ, வசந்தகுமாரி, மகேஷ்வரி காமராஜ், சக்திவேல், பாலம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், மற்றும் சுதாகர், கௌதம், உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரை கூறினார். 

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம்; தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ்சார்பில் அஞ்சலி

பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அரசு அலுவலர் பதவியிறக்கம்!

  • Share on