• vilasalnews@gmail.com

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம்; தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ்சார்பில் அஞ்சலி

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 4-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1வது வார்டு பண்டாரம்பட்டியில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார்,மண்டல தலைவர் சேகர்,மாவட்ட செயலாளர் கோபால்,மாவட்ட துணை தலைவர் கதிர்வேல்,சதீஷ்,முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

  • Share on

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் - உயிரிழந்தவர்களுக்கு மதிமுக சார்பில் 4ம் ஆண்டு அஞ்சலி!

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - கானொளி வாயிலாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் பங்கேற்பு!

  • Share on