• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் - உயிரிழந்தவர்களுக்கு மதிமுக சார்பில் 4ம் ஆண்டு அஞ்சலி!

  • Share on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதிமுக வடக்கு மாவட்ட சார்பில் பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள அலுவலகத்தில் வைத்து 13 பேர் படத்திற்கு மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில தொண்டரணி செயலாளர் பேச்சிராஜ்,  மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன்,  மாவட்ட மீனவரணி செயலாளர் தொம்மை,  முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் அனல் செல்வராஜ், டேவிட், எபேனேசர் தாஸ், சுப்பிரமணி, வேந்தர், மாவட்ட பிரதிநிதி குமார்.   மாவட்ட மாணவரணி  துணைச்செயலாளர் சரவணபெருமாள், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் பொம்முதுரை, மற்றும் முருகன், பரமேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4ம் ஆண்டு நினைவு தினத்தில் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம்; தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ்சார்பில் அஞ்சலி

  • Share on