முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது படத்திற்கு தூத்துக்குடி மாநகர காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் புதுகிராமத்தில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலாளர் கோபால், மண்டல தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஸ் குமார், மாநகர மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ராஜா, மாநகர துணைத்தலைவர் பிரபாகர், முன்னாள் கவுன்சிலர் அருள், சிறுபாண்மையினர் அணி தலைவர் மைதீன், பிரபு ரசிகர்மன்ற தலைவர் குமார முருகேசன், சின்னகாளை, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எப்.எம்.ராகுல், மாநகர துணைத் தலைவர் அருணாச்சலம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.