திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகனும் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரிசன் பிளாசா திரையரங்கில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மாநில திமுக பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி டிக்கெட் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நற்பனி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் ஜார்ஷ்புஷ், மணி, பாக்கியத்துரை, ரமேஷ், திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் சங்கரநாராயணன், அர்ஜுன், சக்தி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.