திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நான்கு நாள் நடைபெற்ற கராத்தே பயிற்சி முகாம் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே அணி 13 தங்கப் பதக்கமும் 11 வெள்ளிப்பதக்கமும் 7 வெண்கல பதக்கமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கராத்தே- இந்திய தலைமை பயிற்சியாளர் சோபுக்காய் கோஜுரியு, தொழில்நுட்ப இயக்குனர் ரென்சி சுரேஷ்குமார், கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில், மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.
இந்த கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் வரும் செப்டம்பர் மாதம் கோவாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.