பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தினர்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கும் நிலையில் அந்தத் தீர்ப்பை பலரும் பாராட்டிவருகிற வேளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் மாநில கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று ( மே 19 ) காலை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில், வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அறப்போராட்டத்தில், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ்,
மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநில செயலாளர் சிந்தியா வைலட், மண்டலத் தலைவர்கள் ஐசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாநகர துணைத்தலைவர்கள் பிரபாகரன், அருணாச்சலம், ஜெயராஜ், மாநகர செயலாளர்கள் கதிர்வேல், மரிய செல்வராஜ், பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல், ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் ராஜு, தெற்கு மாவட்டசெயலாளர் சந்தனகுமார்,
வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்னபாஸ், கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, கனியம்மாள், சாமுவேல் ஞானதுரை, ராதாகிருஷ்ணன், மண்டல மகளிர் காங்கிரஸ் தலைவர் சாந்தி, வார்டு தலைவர்கள் தனுஷ், முத்துராஜ், மைக்கேல் பிரபாகர், தெற்கு மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், வட்டராத் தலைவர்கள் நல்லக்கன்னு, தாசன், சுந்தன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்,
மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திலகேஷ், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, தொழிலாளர் நல யூனியன் பிரிவு தலைவர் சிவராஜ் மோகன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர் கருப்பசாமி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் சித்தார்த்தன், பொதுச்செயலாளர் சிவகளை பிச்சையா, மாவட்ட வக்கீல் பிரிவு பாலசுப்பிரமணி,
ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார மகளிர் அணி தலைவர் மீனா, ஐயம்பெருமாள், மதி, சுல்தான், கருங்குளம் மாரிச்செல்வம், ஹரிதாஸ், நயினார், மாரியப்பன், செல்வம், பாரதி, முத்துகிருஷ்ணன், மகாராஜா, ராமர், உஸ்மான், ஜேசுவா, வெள்ளச்சாமி, பெத்துகணேசன், கனகராஜா, ராஜன், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.