திமுக திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மாப்பிள்ளையூரணி எம்.ஜி.ஆர் நகர் கலைஞர் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி வரவேற்புரையாற்றினார்.
திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்:
முதலமைச்சர் தளபதியார் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் உழைக்கிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பேருந்தில் மகளிருக்கு இலவசம், பால் விலை 3 குறைவு, கொரோனா உதவித்தொகை 4 ஆயிரம், பல சாதனைகளை செய்து 12ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லும் மாணவிக்கு மாதம் 1000, ரேசன் பொருட்கள் சீராக விநியோகம், இந்துக்களின் விரோதி திமுக என பிஜேபி கூறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்களில் அன்னதானம், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை கண்டு பிஜேபி, நடுங்கி ஒடுங்கி உள்ளது.
மீனவர்கள் நலனை காக்க மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுகிறது. ஒரு ஒன்றியத்தில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விதவைகளுக்கு 5 ஆடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து என பல சாதனைகளுக்கு மத்தியில் மழை வெள்ள காலங்களில் தமிழகம் முழுவதும் ஓடோடி சென்று பணியாற்றிய முதல்வரை நாம் பெற்றுள்ளோம்.
மாப்பிள்ளையூரணியை திமுக கோட்டையாக மாற்றியுள்ளோம். நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தம்பி சரவணக்குமார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவருமே திமுக.
இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுகவை யாரும் அசைத்து பார்க்க முடியாது. கனிமொழி எம்.பி, உதவி, மக்கள் பணி என அனைத்து பணிகளையும் முன் நின்று செய்து வருகிறார். நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பணியாற்றும் முதல்வர் எல்லோரையும் ஓரே சமமாக வளர வேண்டும் என நினைப்பவர் இந்த மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் பர்னிச்சர் பூங்கா வரவுள்ளது.
இப்படி பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் மாப்பிள்ளையூரணியில் பட்டா கேட்டு பலர் விண்ணப்பித்துள்ளனர். விரைவில் அது வழங்கப்படும் இன்று ஊராட்சியாக உள்ள மாப்பிள்ளையூரணி அடுத்து பேரூராட்சி நகராட்சியாக மாறவுள்ளது.
இலங்கையில் உள்ள சிங்களர்கள் தமிழர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் பாராபட்சமின்றி முதலமைச்சர் 4 ஆயிரம் டன் அரிசி மருந்து பால்பவுடர் ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.
திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியதை கிடப்பில் போட்டுவிட்டார்.
உச்சநீதமன்றம் இன்று அவரை விடுதலை செய்து நல்ல தீர்ப்பை வழங்கி கவர்னருக்கு ஓரு கொட்டு கொடுக்கப்பட்டு மாநில அரசின் திட்டத்திற்கு கட்டுப்பட்டவர் கவர்னர் என்று நீதிபதி கூறியுள்ளார். மற்றவர்கள் விடுதலையாவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
திமுக சாதாரன இயக்கம் அல்ல அண்ணா இந்தி மொழி எதிர்ப்பு அரசியல் செய்து 1967ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது எமர்ஜன்சி சட்டத்தை எதிர்த்தது திமுக ஆட்சி இழந்தாலும் பரவாயில்லை என்று கலைஞர் ஸ்டாலின் கைது சிறையில் அடைப்பு என எல்லாவற்றையும் கடந்து வந்த தலைவர் தான் நம் முதல்வர் ஸ்டாலின்.
டெல்லியில் கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு சென்ற முதல்வர் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆகியோரை சந்தி;த்து விட்டு வந்த முதல்வரை பிஜேபியுடன் நெருக்கமாவதற்கான சந்திப்பா என்று கேட்டப்போது இல்லை என்று முதலமைச்சர் பதிலளித்தார்.
2024ல் நடைபெறவுள்ள தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளை ஓருங்கிணைத்து தேசிய அளவில் தடம் பதிக்கவுள்ளார் முதல்வர். பிஜேபியை டெபாசிட் இழக்க பணி செய்வோம். மாப்பிள்ளையூரணியில் அடிப்படை பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறுவதற்கு கனிமொழி எம்.பி வழிகாட்டுதலோடு சண்முகையா எம்.எல்.ஏ சிறப்பாக பணியாற்றி வருகிறார். மழை காலத்தில் அவர் செய்த பணிகளை என்றும் மறக்க முடியாது எளிமையான அவர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அடுத்து வரும் தேர்தலில் பிஜேபியை டெபாசிட் இழக்க செய்வோம் என்று பேசினார்.
ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா பேசுகையில்
இப்பகுதியில் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஓரு கோடியே 65 லட்சம் மதிப்பீல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்ற வருகின்றன. எல்லா பணிகளையும் விரைவாக செய்திட வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்திரவிட்டுள்ளார். 505 வாக்குறுதிகளில் ஏறக்குறைய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின் பேசுகையில்,
இப்பகுதி கழகத்திற்காக வாழ்ந்து மறைந்த தியாக சுடர் கே.வி.கே சாமி போன்ற நாடார் சமுதாயம் வளர்த்த கட்சி திமுக நம்மை எல்லாம் அடக்கி வாழ்ந்தவர்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இன்று எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். இது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்று வியக்கும் வகையில் உள்ளது என்றார்.
முன்னதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பூரன கும்பத்துடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சரவணக்குமார் தலைமையில் வரவேற்பளித்தனர்.
தலைமைகழக பேச்சாளர்கள் போடி காமராஜ், நெல்லை ரவி, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுக பெருமாள், உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ரூபன், பிரம்மசக்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் முகமது அப்துல்காதர், செந்தூர்மணி, இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், தொண்டரணி செயலாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் அணி செயலாளர் ஜெசி பொன்ராஜ், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வகுமார், மாவட்ட வர்த்தகர் அணி துணை செயலாளர்கள் பிலோமின்ராஜ், ரெங்கசாமி, கணேசன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, நெல்சன், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அம்பாசங்கர். மாவட்ட மீனவரணி துணை செயலாளர் குணா, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் ஜீவா பாலமுருகன், மாரிச்செல்வம், வக்கீல் அணி துணைச்செயலாளர்கள் ராகுராமன், பூங்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், வசந்தகுமாரி, பாண்டியம்மாள் கதிர்வேல், உமா மகேஸ்வரி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், ஸ்டாலின், ஓன்றிய கவுன்சிலர்கள் முத்துமாலை, ஆனந்தி, கிளை செயலாளர்கள் காமராஜ், ஜெபராஜ், ராமச்சந்திரன், சிவபெருமாள், சந்தனக்குமார், காஜாமைதீன், பாலுநரேன், இசக்கிமுத்து, கனி, மாரியப்பன், செய்ய முகமது, அன்பு ரோஸ், சுபாஷ், தங்கபாண்டி, பழனி, கருப்பசாமி, முத்துராஜ், பொன்ரத்தினம் திருமணி, ஆனந்தராஜ், காசிலிங்கம் பொன்னுச்சாமி, இம்மானுவேல், சன்னியாசி, தனபாலன். அந்தோணி பென்சிகர், ஆறுமுகபாண்டி, சந்திரசேகர், முத்துக்குமரன், வேல்ராஜ், பூசாரி முருகன், குருசாமி, வெற்றிவேல், கணேசன், கதிர்வேல், துரை, சேகர், ஜெயபாண்டி, சந்திரசேகர், ரத்தினக்குமார், அருள்ஜெகன், சந்திரசேகர், சரவணன், பிரபாகர், உத்திரம், பேச்சிமுத்து, வேல்ராஜ், ராமமூர்த்தி, உலகநாதன், கிராஸ் ஞானபிரகாசம், ஜேசுராஜா, ஜான்சன், நாராயணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இசக்கிபாண்டியன், ராமசாமி, இளையராஜா, பகுதி செயலாளர்கள் சிவக்குமார், பொன்னரசு, மற்றும் சுதாகர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர் இளையராஜா, வீரவாள் வழங்கினார்.
எம்.ஜி.ஆர் நகர் கிளைச்செயலாளர் ஜோதிடர் முருகன் நன்றியுரையாற்றினார்.