• vilasalnews@gmail.com

பிஜேபி பொய் பிரச்சாரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும்!

  • Share on

திமுக தென்மண்டல தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன், கோவி லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் அபிராமிநாதன் வரவேற்புரையாற்றினார்.

திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசுகையில்,

உங்களுடைய பணி கடந்த இரண்டு ஆண்டு காலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவை பற்றியும் தலைவரை பற்றியும் தவறான கருத்துகளை பதிவிடுபவர்களுக்கு பதிலுரை வழங்கி வருகிறிர்கள். 10 வருடமாக ஆட்சியிலிருந்த அதிமுக செய்யாத சாதனைகளை ஓருவருடத்தில் நம்முடைய முதலமைச்சர் செய்துள்ளார்.

கொரோனா காலக் கட்டத்தில் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து தடுப்பு ஊசி எடுத்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் உங்கள் பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றார்.

மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில்,

சூரியனை போன்று சுறுசுறுப்பாக இயங்கும் அணி. ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் பணிகளை மக்களிடம் முறையாக கொண்டு போய் சேர்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும். இந்த மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி, ஆகியோர் தகவல் தொழில்நுட்ப அணியை நல்லமுறையில் ஊக்குவித்து சமூகவலை தளம் மூலம் அரசின் சாதனைகளை கொண்டு செல்ல இந்த அணியை பயன்படுத்தி வருகின்றனர். முதல்வரின் திட்டங்களையும் செயல்பாடுகளை இன்னும் வேகமாக எடுத்துச் செல்லுங்கள் என்றார்.

மாநில துணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன் பேசுகையில்,

கடல் போல் விரிந்த திமுகவிற்கு வலிமை சேர்ப்பது நமது அணி தான் நடக்கும் சம்பவங்கள் விஷயங்களை 24 மணி நேரமும் முதல்வர் செயல்பாடுகளை கொண்டு சேர்க்கும் அணிக்கு தலைமை கழக அலுவலகத்தில் அதற்கென ஓர் அலுவலகம் முழுமையாக செயல்படுவதற்கான பணிகள் முதல்வர் உத்தரவு படி நடைபெற்று வருகிறது.

இந்த அணியில் பெண்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும். பிஜேபியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் புதிதாக உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றார். 13 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசை டாக்டர் மகேந்திரன் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் அந்தோணி கண்ணன், ராம்குமார், பழனிக்குமார், ராஜதுரை, அருணாதேவி, மாநகர செயலாளர் பிரபு  தொகுதி செயலாளர்கள் பிரவீன், லெனின், நாகராஜன், ஸ்ரீதர், ஹரிஹரன், பகுதி செயலாளர்கள் மனோ, கௌதம், சுரேஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. ரைடு வன்மையாக கண்டிக்கதக்கது!

அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

  • Share on