முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. ரைடு வன்மையாக கண்டிக்கதக்கது என தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் கடும் கண்டனம் தெரிவிதுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சிந்தனை அமர்வு மாநாடு நிறைவு பெற்று சில நாட்கள் ஆகிய நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் வீட்டில் மத்திய அரசின் கைபாவையான சி.பி.ஐ அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையையால் நாடு அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை தெள்ளதெளிவாக காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களிடம் அறிக்கை அளித்திருப்பது மட்டுமே ப.சிதம்பரம் மீது மத்திய மோடி அரசின் கோபத்திற்கு காரணமாக உள்ளது.நாட்டின் இன்றைய நிலையை பொதுமக்களிடம் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் இது போன்ற எதற்கும் பயண்படாத சி.பி.ஐ வைத்து அரசியல் தலைவர்களை மிரட்டுவது எந்த விதத்திலும் மத்திய அரசுக்கு பயன் தராது.
2024 ம் ஆண்டை நோக்கி தனது ஆட்சிக்கு மோடி அவர்கள் முடிவுரை எமுதி கொண்டிருக்கிறார்.இத்தகைய மிரட்டலுக்கு எல்லாம் காங்கிரஸ் கட்சியும் பயப்படாது தலைவர்களும் பயப்பட மாட்டார்கள். விதை விதைத்தவன் வினை அறுப்பான் காலம் திரும்பும். இவ்வாறு சி. எஸ். முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்