• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தொடரும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியாகும் துயரச்சம்பவம்!

  • Share on

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் சுரேஷ் (வயது 40). பெயிண்டர். இவரது மனைவி இறந்து விட்டதால், இவரது 2 குழந்தைகள் நெல்லையில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். சுரேஷ் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அண்ணாநகரில் உள்ள அவரது தாய் தினமும் சாப்பாடு வழங்கி வந்தாராம். 

இந்தநிலையில், இன்று மதியம் வழக்கம் போல் உணவு கொண்டு வந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சுரேஷ் சிக்கி கொண்டாராம். இதனால் உடல் நசுங்கிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் மற்றும் மத்திபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த நிலையில் கிடந்த சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த 3-ந் தேதி அண்ணாநகரில் இதே போன்று வீடு இடிந்து கர்ப்பினி பெண் உள்பட 2 பேர் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம் - சீறி பாய்ந்த காளைகள்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. ரைடு வன்மையாக கண்டிக்கதக்கது!

  • Share on