தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் இனமுத்து மகன் பெரியநாயகம் (22). இவரது அப்பாவுக்கு சொந்தமான அங்குள்ள வீட்டில் ஒரு பெண் ஒத்திக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் பெரியநாயகம் அந்தப் பெண்ணிடம் வீட்டை காலி செய்யும்படி குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெரியநாயகம் மற்றும் அவரது உறவினரான லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் மாரிமுத்து (28) ஆகிய இருவரும் சேர்ந்து இன்று (15.05.2022) மேற்படி பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அந்தப் பெண்ணிடம் வீட்டை காலி செய்வது குறித்து மீண்டும் தகராறு செய்து தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் வழக்கு பதிவு செய்து பெரியநாயகம் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தார்.