மாப்பிள்ளையூரணி அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் நடைபெற்ற அசன விருந்தை ஊராட்சி மன்றா தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட குடிசை மாற்று வாரியம் ராம்தாஸ்நகரில் உள்ள அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் 22வது ஆண்டு விழாவை யொட்டி கொடியேற்றம் நடைபெற்று நிறைவு விழாவாக ஆலயத்தில் முதல் திருவிருந்து மற்றும் தாளமுத்துநகர் பங்குதந்தை நெல்சன் ராஜ் அடிகளார் துணை பங்குதந்தை பிபின் அடிகளார் தருவைகுளம் பங்குதந்தை வின்சன்ட் அடிகளார் சிவகங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த தந்தை பனிமயம் அடிகளார் ஆகியோர் ஜெபம் செய்து முதல் திருவிருந்து எடுத்து கொண்ட சிறுவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு பின்னர் நடைபெற்ற அசனவிருந்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு வங்கி கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
விழாவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ராம்தாஸ்நகர் இணைச்செயலாளர் செல்வம், நிர்வாகிகள் ஜோசப்தாஸ், ராஜேஷ், ஞானசேகர், ஜோசப் செல்வகுமார், மாய பென்சிகர், பொன்சிங்ராஜா, முன்னாள் பொருளாளர் ராஜா, திமுக கிளைச்செயலாளர் மாரியப்பன், சப் இன்ஸ்பெக்டர்கள் தெய்வமணி, ராஜ்குமார், சுடலை முத்து மரிய இருதயம் உள்பட பலர் கலந்து கொண்ட விழாவில் அனைத்து தரப்பினரை சேர்ந்தவர்களும் அசன விருந்தில் கலந்து கொண்டனர்.