• vilasalnews@gmail.com

2500 ஏக்கர் விவசாய நிலங்கள் தனிநபருக்கு பத்திர பதிவு : சார் பதிவாளரை கண்டித்து சசிகலா புஷ்பா போராட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் 2500 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரை கண்டித்து பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை, கிராமத்தில் சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலத்தை  தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த புதுக்கோட்டை சார்பதிவாளரை கண்டித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே பத்திர பதிவு செய்து கொடுக்க வலியுறுத்தினர்.

பின்னர் சசிகலாபுஷ்பா அளித்த பேட்டியில் "சார் பதிவாளர் நாளை மதியம் 12மணிக்குள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக  உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் அனைத்து முறைகேடுகளும் நடைபெறுகிறது. தமிழகத்தில் எங்கு முறைகேடு நடந்தாலும் மாநில தலைவர் அண்ணாமலை அனுமதியோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக பிஜேபி கட்சி தொடர்ந்து போராடும். 24 மணி நேரத்தில் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் வெளியில் நாளை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்

  • Share on

தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை துறையினரின் நிதி வீணடிப்பு வேலைகள் - சமூக ஆர்வலர் புகார்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு திரண்டு செல்ல தூத்துக்குடி புதிய தமிழகம் கட்சி தீர்மானம்!

  • Share on