திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான சட்டமன்ற தேர்தல் அறிக்கை குழு 28-ம் தேதி தூத்துக்குடி வருவதாக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தி.மு.க சார்பில் 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தோ்தலுக்கான தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு கழக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பியை தலைவராக கொண்டு அறிவிக்கப்பட்டடுள்ளது.
அவா் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் பொதுப் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் மனுக்களாக பெற்று வருகிறார்.
அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பா் 28 திங்கள் கிழமை அன்று வருகை தருகிறார். அன்றைய தினம் மாலை 3.00 மணி முதல் மாலை6.00 மணி வரையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள், மக்கள் பொதுவாக சந்தித்து வரும் மற்றும் தீா்க்கப்பட வேண்டிய அத்தியாவசிய பிரச்சனைகள் இருந்தால் அதை மனுவாக எழுதி நேரில் அளித்திட கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வளா்ச்சிக்கு நல்ல பல கருத்துக்களை எழுத்து மூலம் எழுதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.