பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு வருகிற 13ம் தேதி 63 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி கிராமம் வீரபாண்டியன் கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி உற்சவ விழா 13.05.2022 மற்றும் 14.05.2022 அன்று கொண்டாடப்படுவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 63 அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்களை பொதுமக்கள் நலன் கருதியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்திற்; கொண்டும் 13.05.2022 அன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர்pடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி பகுதிகளில் உள்ள 63 மதுக்கடைகள் மூடப்படுகிறது.