• vilasalnews@gmail.com

தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரியம்மிக்க பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி - தமிழக அரசுக்கு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் நன்றி!

  • Share on

''குருவுக்கு செய்யும் சேவை'' என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரியம்மிக்க பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கோரிக்கையின் அடிப்படையில் நீக்கி, உரிய அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசுக்கு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் நன்றியுடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள பாராட்டு கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது வழியில், தமிழகத்தின் முதல்வராக தாங்கள் சிறப்பான ஆட்சி புரிந்து வருவது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் ஆன்மிக நிகழ்ச்சியானது ''குருவுக்கு சிஷ்யர்கள் செய்யும் சேவை'' என்ற வாழ்வின் உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் பல நூறு வருடங்களாக பாரம்பரியமாக இந்துக்கள் அனைவரும் மனம் மகிழும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏதோ சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதற்கு தடை விதித்து இருந்தார். இதற்கு இந்து மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நான்(''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர்) இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கிடவேண்டும் என்று தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதன்அடிப்படையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, அதற்கான அனுமதியை துரிதமாக வழங்கியுள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய தங்களுக்கும், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், இந்துசமய அறநிலையத்துறையினருக்கும், இதற்காக என்போன்று குரல் கொடுத்த ஆன்மிக அன்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றினையும், பாராட்டையும் மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

  • Share on

தூத்துக்குடி அருகே இளம்பெண் கொலை - 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

மே 13ம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

  • Share on