• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே இளம்பெண் கொலை - 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி அருகே இளம்பெண் கொலை தொடர்பாக  2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் சுடலைமுத்து (42) என்பவர் தனது முதல் மனைவியான காளியம்மாள் இறந்ததால் 2வது மனைவியாக முப்பிடாதி (40) என்பவரை திருமணம் செய்துள்ளார். இதில் முதல் மனைவியான காளியம்மாளுக்கு மீனா (21) என்ற மகள் உள்ளார். 2வது மனைவி முப்பிடாதிக்கு மாயாண்டி (20) என்ற மகன் உள்ளார். மேற்படி மீனாவிற்கு இசக்கிப்பாண்டி என்பவருடன் திருமணமான நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து தற்போது மீனா திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முத்து என்பவரை 2வதாக திருமணம்  செய்து வாழ்ந்து வந்துள்ளார். 

இதனையடுத்து நேற்று (06.05.2022) தாதன்குளம் கோவில் கொடை விழாவிற்காக வந்த மீனா அவரது உறவினர் வீட்டில் இருந்தபோது, மீனாவின்  தந்தை சுடலைமுத்து மற்றும் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தளவாய் மகன் முருகன் (25), சுடலைமுத்துவின் மகன் மாயண்டி (20), சுடலைமுத்துவின் 2வது மனைவி முப்பிடாதி (40) மற்றும் மேற்படி முருகன் என்பவரது தாயார் வீரம்மாள் (48) ஆகிய 5 பேரும் சேர்ந்து மீனாவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் மீனா என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் மற்றும் போலீசார் உடனடியாக மேற்படி மீனாவை கொலை செய்த  மீனாவின் தந்தை சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி மற்றும் வீரம்மாள் ஆகிய 4 பேரையும் உடனடியாக கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் தமிழக அரசு ஓராண்டு நிறைவு கொண்டாட்டம் - மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்!

தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரியம்மிக்க பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி - தமிழக அரசுக்கு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் நன்றி!

  • Share on