தூத்துக்குடியில் தமிழக அரசு ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக அரியணை ஏறி முதலமைச்சர் ஆனார். முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதனையடுத்து, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, நகர்புற அடர் காடு வளர்ப்பு முறையில் மரக்கன்று நடும் விழா, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் திரவியரத்தின புரம் பகுதியில் நடைபெற்றது.
இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மரம் நட்டினார்.
மேலும், இவ்விழாவில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமசந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, காந்திமணி, இசக்கிராஜா, கண்ணன், பொன்னப்பன், ராமர், கந்தசாமி, கனகராஜ், அதிஷ்டமணி, சரவணக்குமார், வைதேகி, எடின்டா, பவாணி மார்ஷல், விஜயகுமார், முத்துமாரி, ராமுத்தம்மாள், மும்தாஜ், விஜயலட்சுமி, பச்சிராஜ், நாகேஸ்வரி, சந்திரபோஸ், ஜாக்குலின் ஜெயா, பேபி ஏஞ்சலின், கந்தசாமி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல். முத்துவேல், ஜெயசீலி, ஜெபஸ்டின் சுதா, ரிக்டா, மகேஸ்வரி, மரியகீதா, தனலட்சுமி, ராஜதுரை, ரெக்ஸின், சரண்யா, சுப்புலட்சுமி, கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் சிவகுமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், மாநகர திமுக மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர் மச்சாது, வட்ட செயலாளர் பொன்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தாசில்தார் செல்வகுமார், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மகேஸ்வரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.