• vilasalnews@gmail.com

2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெரும்: மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேட்டி!

  • Share on

2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெரும் என தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடி, தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில், முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உள்பட மாநில மாவட்ட பாஜக நிர்வாகிகளாக இருந்து மறைந்த தலைவர்கள் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். 

மாவட்ட தலைவர் சித்ராங்கதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; பிரதமர் நரேந்திர மோடியின் வேகத்திற்கும் செயலுக்கும் ஏற்றார் போல் மாநில தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார். அதற்கேற்றால் போல் தெற்கு மாவட்டத்தில் செயல்படுவோம். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை கைப்பற்றுவோம். அதற்கு பிரதமர் மோடி ஆட்சியில் செய்த சாதனைகள் எங்களுக்கு வெற்றியை தேடி தரும் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு கிளைக்கழக பொறுப்பாளர்கள் முழுமையாக நியமிக்கப்பட உள்ளார்கள். அதற்கான சேர்க்கைக்கு நேரடியாக சென்று நிர்வாகிகளோடு சென்று களப்பணி ஆற்றவுள்ளோம். 

2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெறும் அதற்கான பணிகள் முழுமையாக நடைபெற இருக்கின்றன. தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறுகின்ற அனைத்து பணிகளும் பிரதமர் மோடியின் பார்வையில் நடைபெற்று வருகின்றன. முதன்மை துறைமுகமாக மாறுவதற்கு அனைத்து ஓத்துழைப்பையும் மத்திய அரசு அளித்து வருகிறது. என்றார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், செல்வராஜ், பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரவீசந்திரன், அறிமுகஉரை நிகழ்த்தினார். 

மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். மாநில ஓபிசி அணி செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் வக்கீல் சந்தனகுமார், மாநில பார்வையாளர் முத்துகிருஷ்ணன், கோட்ட இணை அமைப்பு செயலாளர் ராஜா, திருநெல்வேலி மாவட்ட பார்வையாளர் பாலாஜி, மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னா மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஏற்புரைஏற்று கட்சி வளர்ச்சி குறித்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் சந்தனகுமார், ஒபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், சந்தனக்குமார், அமைப்பு சாரா மாநில செயலாளர் தேவகுமார், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


SHARE0

உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் : மே 17ம் தேதி நேர்முகத் தேர்வு!

தூத்துக்குடியில் தமிழக அரசு ஓராண்டு நிறைவு கொண்டாட்டம் - மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்!

  • Share on