• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் : மே 17ம் தேதி நேர்முகத் தேர்வு!

  • Share on

தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 4  பணியிடங்களுக்கு வரும் 17ம் தேதி நேரடி நியமன தேர்வு நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் அமரவாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: 

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில்(ஆவின்)   பிரதம 177 சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 33,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. 

தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டகளை செய்து வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம்(2021 – 22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 4 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 17.05.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த நேர்முக தேர்வு 74, பாலவிநாயகர் கோவில் தெரு, 2வது தளம், தூத்தக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share on

மதிமுகவின் 29வது ஆண்டு துவக்க விழா : தூத்துக்குடியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெரும்: மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேட்டி!

  • Share on