29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக வாழ்வாதாரங்களுக்காவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் சமரசமின்றி உழைக்கும் என அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மதிமுகவினரால் 29 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரம் மதிமுக சார்பில் பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் மதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சி மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், மாநில தொண்டரணி துணை செயலாளர் பேச்சிராஜ், எம்எல்எப் மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் தொம்மை, மாநகர பொருளாளர் செல்லப்பா, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், குமார், எம்எல்எப் தூத்துக்குடி அனல்மின் நிலைய திட்ட செயலாளர் எபனேசர் தாஸ், வட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர அவைத்தலைவர் செந்தாமரைக் கண்ணன், எம்எல்எப் மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், பாண்டி உள்ளிட்ட மதிமுகவினர் பலர் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.