• vilasalnews@gmail.com

35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலனி குடியிருப்பில் வசித்த குடும்பங்கள் - மீண்டும் அதே இடத்தில் சந்தித்து மகிழ்ந்த பசுமை நிகழ்வு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தபூமங்கலம் டிசிடபுள்யூ காலனியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வசித்தவர்கள், தற்போது மீண்டும் ஒன்று கூடி தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட பசுமையான நிகழ்ச்சி சேர்ந்தபூமங்கலம் டிசிடபுள்யூ காலனியில் நடைபெற்றது.                   

பல ஆண்டுகளுக்கு முன்பு  ஒன்றாக ஒரே பள்ளி கல்லூரிகள் படித்த மாணவர்கள் பின்பு மீண்டும் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனங்களிலோ அல்லது ஏதாவது ஓர் இடத்தில்  சந்தித்து கொள்ளும் நிகழ்ச்சி அரங்கேறுவது வழக்கம். ஆனால், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலனி குடியிருப்பு பகுதிகளில் வசித்து பின்பு கால ஓட்டத்தில் வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்ந்து சென்ற சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது அதே குடியிருப்பு பகுதியில் மீண்டும் சந்தித்து தாங்கள் வாழ்ந்து கடந்த அந்த காலங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தபூமங்கலம் டிசிடபுள்யூ காலனியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்காக  வாட்ஸ்அப் குரூப் மூலம் ஒன்று சேர்க்கும் முயற்சியில் டிசிடபுள்யூ காலனி வாட்ஸ்அப் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த குமரேசன் சந்தனகுமார், ரூபன் அசோகன், மந்திரமூர்த்தி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி விழாவானது காலை முதல் இரவு வரை நடைபெற்றதுது. இதில், ஆடல் பாடல், பல குரலில் பேசுவது, இசை கச்சேரி என பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன்டன்  கலகலப்பாகவும், ஆனந்தமாகவும், பெரும்மகிழ்வுடன் நடந்தது.

தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் நினைவு பரிசுவழங்கினார்.

டிசிடபுள்யூ நிறுவனத்தின் மூத்த உதவி தலைவர் சீனிவாசன் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துரை வழங்கி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் மூத்த குடியிருப்பு வாசிகளுக்கு சால்வை அணிவித்தும் கௌரவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் சதீஷ், ஆத்தூர் விவசாயிகள் சங்க தலைவர் முருகானந்தம் மற்றும் நந்தினி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி சிறையில் கைதிகளிடம் பணம் பெற்ற உதவி ஜெயிலர் சஸ்பெண்ட், ஜெயிலர் திருச்சிக்கு மாற்றம்!

கனிமொழி எம்பி குறித்து அவதூறு - நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் திமுக வழக்கறிஞர்கள் மனு!

  • Share on