தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகே கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கியிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அங்கே தண்ணீர் தேங்குவதற்கு காரணமாக இருந்த கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக அங்கே வைக்கப்பட்டிருந்த இரண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் பழுதாகி இருப்பதையறிந்து அதில் ஒன்றை உடனடியாக சரிசெய்து கொடுத்ததுடன் மற்றொன்றை நாளை மாலைக்குள் சீரமைக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.