தமிழகத்தில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இந்து தெய்வங்களை இழிவு படுத்தி செய்தி வெளியிட்டு வருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான இந்து முன்னணியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இந்து தெய்வங்களை இழிவு படுத்தி செய்தி வெளியிட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஒரு ஆண்டிற்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சேனலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டிகவசத்தை இழிவுபடுத்தி காணொளி வெளியிட்டு இழிவுபடுத்தி இருந்தது. அதற்கு பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் செய்த பின்னர் கடந்த அதிமுக அரசு அவர்களை கைது செய்ததோடு மத்திய அரசு அந்த யூடியூப் சேனலையும் தடைவிதித்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் U2 Brutus என்ற You tube சேனலில் சிதம்பரம் நடராஜர் பெருமானை மிகவும் தவறான வகையில் விமர்சித்து காணொளி வெளியீட்டு உள்ளார்கள். இது இந்துக்களின் மத்தியில் பெறும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களுக்கு எதிராக சமூக விரோதிகள் இது போன்று கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது.
எனவே தாங்கள் இந்து தெய்வங்களை இழிவுபடுத்திப் காணொளி வெளியிட்ட இந்த சேனலை முடக்குவதோடு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டிருந்தது.