• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் எம்எல்ஏ., வுடன் ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்க்கண்டேயனை, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்தித்து விழா அழைப்பிதழை கொடுத்தனர்.

வருகிற மே13ம் தேதி சித்திரை கடைசி வெள்ளியன்று நடைபெற இருக்கும், பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலய 66வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், ஆதனூர் கட்டபொம்மன் திடலில் இருந்து, பாஞ்சாலங்குறிச்சிக்கு 17வது ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் பேரணி நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் நடைபெறும், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் பேரணி விழாவில் கலந்து கொள்ள, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்து, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

  • Share on

கோவில்பட்டியில் வரும் 17ம்தேதி தேசிய அளவிலானஹாக்கி போட்டி துவக்கம்

சமூக ஊடகங்களில் தொடர்ந்து இந்து தெய்வங்களை இழிவு படுத்தி வீடியோ வெளியீடு - மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு!

  • Share on