கோவில்பட்டி செயற்கை புல் தரை மைதானத்தில் பகல் மற்றும் மின்னொளியில் தேசிய அளவில் ஹாக்கி போட்டிகள் வரும் 17ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது என்று கனிமொழி எம்.பி.,தெரிவித்தார்.
துாத்துக்குடி கீதா ஓட்டல் அரங்கில், கோவில் பட்டியில் நடக்க உள்ள தேசிய அளவிலான ஹாக்கி போட்டி குறித்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப் பிடாரம் எம்.எல்.ஏ., சண்முகையா, ஹாக்கி போட்டி நிர்வாகிகள் கே.ஆர். அருணாசலம், சேகர் மனோகரன், செந் தில்ராஜ் குமார், சங்கிலிகாளை ஆகியோர் முன்னிலையில் துாத்துக்குடி எம்.பி., கனிமொழி நிருபர்களிடம் கூறிய தாவது:
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி துாத்துக்குடி மாவட் ம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல் தரை மைதானத்தில் பகல் மற்றும் இரவு மின்னொளியில் வரும் 17ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் போட்டியில் 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.
50 போட்டிகள் நடக்கிறது. 540 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். காலை 6.30 மணி முதல் மாலை 8 மணி வரை நடக்கிறது.
இதுபோன்ற போட்டி நடத்துவதன் மூலம் வரும் காலங்களில் இளம் தமிழக வீரர்கள் இடம் பெற இது உகந்ததாக இருக்கும். இவ்வாறு கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.
விழா ஒருங்கிணைப்பாளர் சேகர் மனோகரன் கூறுகையில், கடந்த ஆண்டு கனிமொழி எம்.பி., தலைமையில் 11 வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் சிறப்பாக நடந்த காரணத்தால் ஹாக்கி இந்தியா அமைப்பு இந்த ஆண்டும் கோவில்பட்டியில் இந்த போட்டியை நடத் துவதற்கு அனுமதி அளித்துள்ளது என்றார்.