துாத்துக்குடி மாவட் டம் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி கிராம சபை கூட்டம் நேற்று மாதாநகர் சந்தனமாரியம் கோயில் வளாகத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், துாய்மை பாரத இயக்கம், விவசாயிகளின் கடன் அட்டை உள்ளிட்ட அரசு திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் பேசுகையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் படிப்படியாக மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் இந்த ஊராட்சியில் 58 கிராமங்கள் உள்ளது. இதில் 4 கிராமங்களில் மட்டுமே வீட்டு குடிநீர் இணைப்பு உள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் நடப்பாண்டில் 30 கிராமங்களுக்கு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும்.
மீதியுள்ள 24 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கி முடிக்கப்பட்டு விடும் என்றார்.
இக்கூட்டத்தில், துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, துாத்துக்குடி ஊரக பகுதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, துாத்துக்குடி மீன்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்துறை ஆய்வாளர் இந்துசாரா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ராதா, உதவி வேளாண்மைஅலுவலர் மீனாட்சி, ஆய்வாளர் சுகாதார பிரதீப்குமார், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வினோத், வி.ஏ.ஓ. விக்னேஷ், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி துணைத் தலைவர் தமிழ் செல்வி, கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் சிவகுமார் மற் றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.