• vilasalnews@gmail.com

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் விழா - கனிமொழி எம்பி.,க்கு அழைப்பு!

  • Share on

பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற இருக்கும் வீர சக்கதேவி ஆலய 66வது ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆகியவற்றிற்கு வருகை தருமாறு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

வருகிற மே 13ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில், இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட சுதந்திர போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீர சக்கதேவி ஆலய 66வது ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆகியவற்றில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன் தலைமையில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள், தூத்துக்குடியில், பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்த சந்திப்பின் போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாநில துணை தலைவர் மல்லுச்சாமி, கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம், திமுக பிரமுகர் வெயில் ராஜ், தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மதிமுக தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள், மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை முன்னாள் தலைவர் எம்.எஸ் குமார், வீரபாண்டிய கட்ட பொம்மன் தேசிய கழகம் மாநில தலைவர் எஸ்.பி. ஜெயராமன், மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை தலைவர் ஜெகவீரராஜ், செயலாளர் விக்னேஷ் குமார்,  சரவணன், செல்வராஜ், மாரிமுத்து, ஜோதி பாஸ், சுதன், பாலா, விஜயராஜ், ரமேஷ், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

புதூர் மாட்டு வண்டி பந்தயம் - விளாத்திகுளம் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமத்தில் நடப்பாண்டில் 30 கிராமங்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு - கிராம சபை கூட்டத்தில் தலைவர் சரவணகுமார் தகவல்

  • Share on