• vilasalnews@gmail.com

புதூர் மாட்டு வண்டி பந்தயம் - விளாத்திகுளம் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்

  • Share on

விளாத்திகுளம் அருகே புதூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

புதூர் வட்டார கம்மவார் சங்கம் சார்பில்  மாமன்னர் திருமலைநாயக்கர் 439-வது பிறந்த நாள் மற்றும் யுகாதி திருநாள் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த பந்தயத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாட்டு வண்டி பந்தயம் புதூர்-அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டிக்கு 10 மைல் பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டிக்கு 6 மைல் பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய மாட்டு பந்தயத்தில் 11 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பந்தயத்தில் 17 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.

இந்த போட்டியை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் பேரூர் கழக செயலாளர் மருது பாண்டியன், புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் வனிதா, துணைத்தலைவர் பச்சைமலை, மண்டல கம்மவார் சங்க தலைவர் ஜெயவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன.

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலை இருபுறமும் திரளான மக்கள் கலந்துகொண்டு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி தொடக்கம்!

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் விழா - கனிமொழி எம்பி.,க்கு அழைப்பு!

  • Share on