தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி திமுக மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி லுர்தம்மாள்புரம் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் தொம்மை சேசுவடியான் திடலில் நேற்று சனிக்கிழமை தொடங்கியது.
இப்போட்டியில் வெற்றி பெரும் அணிகள் இன்று ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றனர்.
முதல்நாள் போட்டியில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், தொழிற்சங்க தலைவர் ராஜு, தொண்டரணி தலைவர் ராஜா, திமுக இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், கவுன்சிலர் பவாணி மார்ஷல், திமுக வட்டச்செயலாளர்கள் தினகரன், கருப்பசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுகளும் வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து செய்கின்றனர்.