தூத்துக்குடியில் மக்களின் பேராதரவை பெற்ற அற்புதம் மருத்துவமனை விரிவாக்கத்துடன் புதிய முகவரியில் மே 1ம் தேதியான நாளை திறப்பு விழா நடைபெறுகிறது.
தூத்துக்குடி வி.வி.டி. சாலையில் அற்புதம் மருத்துவமனை இயங்கி வருகிறது. மக்களின் பேராதரவை பெற்ற அற்புதம் மருத்துவமனை விரிவாக்கத்துடன் கூடிய புதிய முகவரியில் மே 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவர்புரம் சாலையில் தென்பாகம் காவல் நிலையம் பின்புறம் திறப்பு விழா நடைபெறுகிறது.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் ஜெப ஆராதனை செய்து அற்புதம் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை நிறுவனர் டாக்டர். ஆர்.முரளிதரன், திண்டுக்கல் அரசன் குழும சேர்மன் டி.உலகுடைய சிவராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருமண்டல பொறுப்பாளர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வணிக பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அற்புதம் மருத்துவமனையில் பிரபல மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் (எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர். ஜேஸ்லின் ஜேம்ஸ் (நுன் கதிரியல் நிபுணர்), டாக்டர் முத்துலட்சுமி (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்), டாக்டர்.ராஜலக்ஷ்மி (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்), டாக்டர் மதன் (பொது மருத்துவம்), டாக்டர் ரவிச்சந்திரன் (பொது மருத்துவம்), டாக்டர் துளசிராமன் (இதயநோய் சிறப்பு மருத்துவர்), டாக்டர் சரத்குமார் (மயக்கவியல்), டாக்டர் அமுதன் (புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் காந்திமதி (புற்றுநோய்), டாக்டர் ராஜா விக்ணேஷ் (மூளை தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் சரவண ராஜா (சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் அனிஷ் (பொது அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் ராஜ்குமார் (பிளாஸ்டிக் சர்ஜன்), டாக்டர் ஸ்ரீகாந்த் (இரத்த குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் சந்திரிகா (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் பிரேம் லோகநாதன் (குழந்தைகள் நலம் சிறப்பு மருத்துவர்) டாக்டர் சீனிவாசன் (மனநல மருத்துவர்),
டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ் (எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்), சந்தான கிருஷ்ணகுமார் (காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர். நிவாஷ் மாறன் (பொது அறுவை சிகிச்சை), டாக்டர். டால்டன் (பொது அறுவை சிகிச்சை), டாக்டர். கண்ணன் (மூளை நரம்பியல்), டாக்டர். பாரதி மதன் (குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர்), டாக்டர். ஶ்ரீராம் (மனநல மருத்துவர்), டாக்டர். ஸ்டீஃபன் (பல் மருத்துவர்), டாக்டர்.ராபின் ரிச்சர்டு (காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர். சந்தியவதனா (தோல் நோய் சிகிச்சை நிபுணர்), டாக்டர். அன்பரசி (நுன்கதிரியல் சிகிச்சை நிபுணர்), டாக்டர். பாரதிகண்ணன் (நுன்கதிரியல் சிகிச்சை நிபுணர்), டாக்டர். சுகிர்தராஜ் (மயக்கவியல் நிபுணர்), டாக்டர். இன்சுவை (கதிரியக்க சிறப்பு சிகிச்சை நிபுணர்), டாக்டர். ஶ்ரீசரவணன் (மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) டாக்டர். மணிகண்டன் (மயக்கவியல் நிபுணர்), உட்பட மருத்துவ துறையில் சாதனை புரிந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதிய முகவரியில் விரிவாக்கத்துடன் கூடிய அற்புதம் மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள், கூடுதல் படுக்கை வசதிகள், சிறப்பு மருத்துவர்கள் என ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குவதன் நோக்கத்துடன் மருத்துவ சேவைப் பயணத்தை தொடங்கி உள்ளோம் என்று அற்புதம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஜூலியஸ் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.