தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை மின் மோட்டார் அறையை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அய்யர்விளை மற்றும் அம்பேத்கார் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சாலை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி, உதவி செயற் பொறியாளர் பிரின்ஸ், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.