எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர்கள் சக்தி மாரிமுத்து, சண்முகையா, சுடலைமணி மற்றும் மகேஷ் ஆகியோர் இன்று (28.04.2022) எட்டையாபுரம் நாவலக்கம்பட்டி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட எட்டையாபுரம் மேல நம்பிபுரம் பகுதியை சேர்ந்தவர்களான பால்சாமி மகன் இளங்கோவன் (54) மற்றும் நாகராஜ் மகன் அன்புபாண்டி (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 113 மதுபாட்டிகள் மற்றும் ரூபாய் 24,430 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று மேற்படி போலீசார் எட்டையாபுரம் மேலவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட கோவில்பட்டி வி.ஓ.சி நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துராமலிங்கம் (46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 184 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 1,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி போலீசார் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இளங்கோவன், அன்புபாண்டி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 297 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 25,430 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.