பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற இருக்கும் வீரசக்கதேவி ஆலய 66வது ஆண்டு திருவிழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீர சக்க தேவி ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வருகிற மே மாதம் 13,14 ஆகிய தேதிகளில் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீர சக்க தேவி ஆலய 66வது ஆண்டு திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில், எம்பிக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆன்மீக பெருமக்கள், சமுதாயப் பெரியோர்கள், அனைத்து அரசியல் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் சார்பில் அழைப்பு கொடுக்கப்படும்.
அதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் சார்பில் வீர சக்க தேவி ஆலய விழாவில் கலந்து கொள்ள, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று கொண்ட பின் முதன் முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று அவரும் விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, வருகிற மே 13 ம் தேதி பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீர சக்க தேவி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அவரது வருகையை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவினர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.