• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம்!

  • Share on

தூத்துக்குடி  மாநகர பகுதியிகளில் இரண்டாம் கட்ட தடுப்பு ஊசி செலுத்தாதவர்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதனை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோன தொற்றை கட்டுபடுத்துவது  தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டுகளில் இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய கொரோனா தடுப்பு ஊசியை சுமார் 60 ஆயிரம் பேர் வரை செலுத்தாத நிலையில் உள்ளனர். எனவே,  மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு வரும் 30ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமணை உள்ளிட்ட 127 இடங்களில் சிறப்பு தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.

எனவே, இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளவும், கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கிடம் மாநகர பொதுமக்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • Share on

குரூஸ்பர்னாந்து நினைவு தினத்தை ஒட்டி துாத்துக்குடியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி!

அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவில் ஐக்கியம்

  • Share on