
துாத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு தினத்தை ஒட்டி முன்னாள் கவுன் சிலர் எட்வின்பாண்டியன் சார்பில் பெண்களுக்கு தையல் இயந்திரம், சேலை ஆகியவை வழங்கப்பட்டது.
துாத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 92வது நினைவு தினம் நேற்று குரூஸ்பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. ஏழை, எளிய பெண்கள் இருவருக்கு தையல் மிஷின், சுமார் 300 சேலைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வேளாங்கன்னி மாதா கோயில் பங்கு தந்தை ஜெரோசின் கட்டார் வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் எட்வின் பாண்டியன் முன்னிலை வகித்தார். குரூஸ்பர்னாந்து நற்பணிமன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் தலைமை வகித்தார். நற்பணி மன்ற செயலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.
வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கரன், கல்யாணசுந்தரம், அமல் டெரன்ஸ், லுார்துசாமி, நாதன், தினேஷ், சேவியர், சகா யராஜ், தீபக், சுடலை முத்து, பிரவீன், சுரேஷ், வளன், ஆண்ட்ரூஸ், வக்கீஸ், ஆனந்த், கென்னடி, அலாய் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.