தூத்துக்குடி ஆட்சியர் வளாகத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டபோது, அங்கு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, லக்கம் மாள் தேவி கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் நேற்று இரவு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீ ரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது, தங்கள் பகுதியில் கோவில் கொடைவிழா நடத்துவது தொடர்பாக உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக் குளிக்க முயன்றார்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.