தூத்துக்குடியில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் சிலை அருகில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், வட்டாட்சியர் செல்வக்குமார், வாகன போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் (நிலை I) பெலிக்ஸ் மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.