முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில், எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டின் பெயரில் திமுக வார்டு செயலாளர் ரத்தினம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கோவில்பட்டி நகர கழக செயலாளர் அய்யாதுரை பாண்டியன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு முனியசக்தி ராமசந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.