மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குமரன் நகரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு மாவட்ட ஊராட்சி மன்ற நிதியிலிருந்து மாவட்ட கவுன்சிலர் அருண்குமார் 19 லட்சம் நிதி ஓதுக்கீடு பெற்றுக் கொடுத்தார்.
அதே வேளையில், அப்பகுதியில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு இட வசதி இல்லாத நிலை இருந்தது. இந்த நிலையில், தற்போது தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளர் கணேசன், தனது சொந்தமான இரண்டு சென்ட் இடத்தை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஓதுக்கீடு செய்தார்.
இதனையடுத்து புதிய நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு இன்று நடைபெற்ற பூமி பூஜையில், மாப்பிள்ளையூரணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஒன்றிய துணைச்செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்செல்வி, ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.
இந்நிகழ்சசியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசந்தகுமாரி, பாரதிராஜா, கதிர்வேல், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மாரிச்செல்வம், மாவட்ட பிரதிநிதி நெல்சன், கூட்டுறவு கடன்சங்க துணைத் தலைவர் சிவக்குமார், கிளைச்செயலாளர் ஆனந்தகுமார், மற்றும் சுதாகர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.