• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு - தேசிய பஞ்சாயத்துராஜ் கூட்டத்தில் தலைவர் வேண்டுகோள்!

  • Share on

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கிராமநிர்வாக அலுவலர் விக்னேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை துறை அதிகாரி மீனாட்சி கீழ அழகாபுரி தலைவர் வழக்கறிஞர் மாடசாமி, பொதுமக்கள், திருநங்கைகள் உள்பட பலர் கலந்து கொண்டு ஊராட்சி வளர்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

மேலும், கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய பர்னிச்சர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள 59 கிராம மக்களுக்கும் முன் உரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்றி அனைவருக்கும் மேல்மட்ட வாழ்க்கை சூழல் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தி கிராம ஊராட்சியாக அமைத்தல், அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல், நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் பயன்களை பெரும் வகையில் இடை வெளிகளை குறித்து தரமான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை தயாரித்து அதனை திறம்பட செயல்படுத்துவது, நிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக பங்கு உள்ளது. அவர்களை முழு வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்வில் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனைகளை குறித்து நடவடிக்கை எடுத்தல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் ஊரகம் 2018 19ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆவாஸ் பிளஸ் கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியல்களை கிராமசபையில் வைத்து ஓப்புதல் பெற வேண்டும். 

2021 22ம் ஆண்டிற்கு 289887 வீடுகள் மத்திய அரசால் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் அந்த அந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக மத்திய அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் நாளது வரை அனுமதி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளில் பட்டியலையும் மீதம் வழங்கப்பட வேண்டிய பட்டியலையும் கிராமசபையில் வைத்து ஓப்புதல் பெறுவது, இயற்கை வழங்கல் மற்றும் பசுமையை நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாக்கவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துதல், தூய்மையை கடைபிடித்தல் மற்றும் சுற்றுசூழலை பாதுகாத்து பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நிலைத்த வளர்ச்சிக்கு மையமாக இருப்பது மக்களே என்பதை நாங்கள் உணர்கிறோம். மக்கள் அனைவரும் ஓருங்கிணைந்து செயல்பட்டு எங்களுக்கு பயன்தரக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும சமூக மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பை மேம்படுத்துவோம். உள்ளிட்ட ஏழு உறுதிமொழிகளை அனைவரும் எடுத்துக்கொண்டனர். 

தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில், தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள மாப்பிள்ளையூரணியை தமிழகத்தில் முன்மாதிரி ஊராட்சியாக விளங்கிட அனைவரும் ஓத்துழைப்பு அளிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். 

கிராமசபை கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், தங்கமாரிமுத்து, மற்றும் கௌதம், சுதாகர், சப் இன்ஸ்பெக்டர்கள் மரிய இருதயம், பால்மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஊராட்சி செயலர் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

  • Share on

தூத்துக்குடியில் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள்? - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா!

  • Share on