• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள்? - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

  • Share on

தூத்துக்குடியில் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட  நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை வளாகத்திற்குள்  கிரேட் காட்டன்ரோடு கடை மற்றும் லயன்ஸ்டவுன் 2ம் நம்பர் கடை ஆகிய இரண்டு ரேசன் கடைகள் இயங்கி வருகிறது.

இந்த நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் அரசு ரேஷன் கடையில் உள்ள பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கிரேட் காட்டன் ரோடு  கடை மற்றும் லைன்ஸ்டவுன் இரண்டாம் நம்பர் கடை  ஆகிய இரு கடைகளில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி பருப்பு பாமாயில் சீனி உள்ளிட்ட பொருட்களை, கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், இச்செயலை கடை ஊழியர்களே செய்வதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். 

எனவே, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் இந்த இரண்டு கடைகளிலும் பொருட்களை திருடி வெளிச் சந்தையில் விற்கும் நபர்கள் மீது உரிய விசாரனை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

  • Share on

75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டம் - விடுதலைப் பேரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சிகள்!

மாப்பிள்ளையூரணியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு - தேசிய பஞ்சாயத்துராஜ் கூட்டத்தில் தலைவர் வேண்டுகோள்!

  • Share on