75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் போரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சிகள் 24.04.2022 அன்று முதல் 30.04.2022 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் பேரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சிகள் 24.04.2022 அன்று முதல் 30.04.2022 வரை பாளையங்கோட்டை சாலை ஏ.பி.சி.வீரபாகு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள்.
இந்த புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையிலும் விடுதலைப்பேரில் பங்கு பெற்ற தமிழகத்தை சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகள் மற்றும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்த கொள்ளும் வகையிலான பல்வேறு அரசுத் துறை சார்ந்த பல்துறை பணிவிளக்க கண்காட்சிகள் மற்றும் அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட சமூக நலன் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், வனத்துறை உட்பட பல்வேறுத் துறைகளின் திட்டங்கள் குறித்தும், 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றும் வகையில் செய்தித்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் இப்புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்கள்.