• vilasalnews@gmail.com

பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா

  • Share on

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கடனுதவி பெற்ற பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான பயிற்சி முகாம்தொடக்க விழா நடைபெற்றது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகத்தின், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின், மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கடனுதவி பெற்ற பனை தொழிலாளர்கள் சுய உதவி குழு பெண்  பயனாளிகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் சமுதாய கூடத்தில் வைத்து  தொடக்கவிழா நடைபெற்றது.

பயிற்சி முகாமிற்கு மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ராயப்பன் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான  டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்துகொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் .

இதில் நலிவடைந்து வரும் பனை தொழிலை பாதுகாக்க வேண்டும். பனை  தொழிலை மேம்படுத்த,பனை  தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டு வரும் வறுமையை ஒழிக்க தற்போது பெற்றுள்ள கடன் தொகையை முறையாக பயன்படுத்தி பெண்கள் சுயதொழில் தொடங்கி மேம்படுத்தி. கடனை முறையாக செலுத்தி புதிய, பெரிய  அளவில் கடன்களை பெற்று தொழிலை விரிவு படுத்த வேண்டும், மேலும் பனையை பாதுகாக்க வேண்டும் செங்கல் சூலைகளுக்காக பனை மரங்கள்  வெட்டப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் தானாக முன்வந்து பனை  விதைகளை விதைக்க வேண்டும் என கூறினார். 

மேலும் இதில் அரசுத் துறை வல்லுநர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் அரசு திட்டத்தின் கீழ் மானிய தொகை அளவு, மானியம் விண்ணப்பிக்கும் முறை, தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய உதவி, திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குறிப்பிட்ட சில தொழில்கள், தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள், வனம், சார்ந்த தொழில்கள், கைமுறை காகிதம் மற்றும் நார்ப்பொருட்கள் சார்ந்த தொழில்கள், வேளாண் சார்பு மற்றும் உணவு பொருள்கள் சார்புத் தொழில்கள், பாலிமர் மற்றும் ரசாயன சார்ந்த தொழில்கள், பொறியியல் மற்றும் மரபு சாரா எரிசக்தி சார்ந்த தொழில்கள், சேவை மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில்கள், தகுதியற்ற தொழில்கள் பட்டியல், இத்திட்டத்தில் இரண்டாம் முறை கடன் தொகை பெறுவதற்கான வழிவகைகள் கூறப்பட்டன.

இப்பயிற்சியில் பனைத் தொழிலாளர்கள் சுய உதவிக்குழு பெண்கள் 60 பேர் கலந்து கொள்கிறார்கள் தொடர்ந்து பயிற்சி பத்து நாட்கள் நடைபெறுகிறது. இப் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு மானிய தொகை வழங்கப்படுகிறது முன்னதாக லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி அனைவரையும் வரவேற்றார். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன அலுவலர் சுதாகரன் நன்றி கூறினார்.

  • Share on

தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டம் - விடுதலைப் பேரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சிகள்!

  • Share on